இலக்குகள்:
1. இயற்கை, சுற்றுச்சூழல், சூழலியல் ஆகியவற்றைப் பாதுகாக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான மாதிரிகளை ஊக்குவித்து, பாரம்பரியப் பண்பாட்டைப் பாதுகாத்து, பண்பாட்டின் மூலம், உள்ளூர் மக்களின் பண்பாடு சார்ந்த வளர்ச்சியை அடைதல்
2. உள்ளூர் வளங்களைப் பயன்படுத்திக் கிராமங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி அவற்றை நகர/பெருநகர/ உலகளாவிய சந்தைகள் பயன்படுத்தும் அளவிற்குக் கிராமப்புறத் தொழில்முனைவோரை ஊக்குவித்து வளர்த்தெடுத்தல். இதன் விளைவாகக் கிராம மக்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்தல், நெரிசலான சேரிகளிலும் மனிதர்கள் வாழத் தகுதியற்ற இருப்பிடங்களிலும் வாழ்தல், கிராமத்தில் உள்ள சொந்த வீடு, குடும்ப உறவு, பண்பாடு ஆகியற்றை இழத்தல் என்பன நிகழாது.
3. கிராமத்தில் உற்பத்தியாகும் பொருட்களை விற்பனை செய்ய கிராமங்களுக்கும் உள்நாட்டு சந்தைகளுக்கும் இடையே ஒரு இணைப்பை உருவாக்குதல். இதன் மூலம் கிராமத்தில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு இலாபகரமான விலையை நிர்ணயம் செய்தல், உற்பத்தியாளர்கள் பயனடைவதை உறுதி செய்தல்.
4. கிராமங்களுக்கு ஏற்புடைய பொருத்தமான திட்டங்களுக்கானப் பயிற்சிகளையும், புதிய உத்திகளையும் வழங்குவதன் மூலம் கிராமப்புறத் தொழில்முனைவோரின் அனுபவ அறிவையும் திறனையும் ஊக்குவித்து வளர்த்தெடுத்தல்.
5. கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தி வலுப்படுத்தும் நோக்கில் நிலையான பொருளாதார வளர்சிசியை ஏற்படுத்தும் கிராமச் சூழலை உருவாக்குவதன் மூலம் பாரம்பரியப் பண்பாடு சார்ந்த வாழ்க்கைத் தரத்தைப் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பெறுதல்.
6. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுத்தி நிலையான வளர்ச்சிக்கான சமூகப் பண்பாட்டைக் கட்டமைக்கும் நோக்கில் சமூகப் பங்களிப்பை உருவாக்குதல்
7. கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதார நலவாழ்வு ஆகியவற்றை மேம்படுத்த விவசாய வளர்ச்சித் திட்டங்களை ஊக்குவித்து வளர்த்தெடுத்தல்.
8. விழிப்புணர்வை உருவாக்கி, விழிப்புணர்வுக்கானத் திட்டங்கள், பயிற்சிகள் மூலம் அரசினுடைய கொள்கைகளின் பயன்களை விவசாயிகள் பெறச்செய்தல்.
9 சுகாதாரம், கல்விச் சேவைகள், குடிநீர் வசதி ஆகியவற்றை வழங்குதல் இத்துடன் ஆரோக்கியம், இளைஞர்களுக்கான கல்வி/விளையாட்டுத்
திட்டங்கள், சமூகச் செயல்பாடு, விவசாய மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதி போன்றவற்றை உருவாக்குதல், மக்களுடனும் செயற்பாட்டாளர்களுடனும் வலுவான கூட்டுறவை உருவாக்குவதன் மூலம் தொழில்நுட்பம், வள மேலாண்மைச் சேவைகள் போன்றவற்றிற்கான அணுகலை வழங்குதல் மூலம் ‘மாதிரி கிராமம்’ மேம்பாட்டுத் திட்டத்தை வடிவமைத்துச செயல்படுத்துதல்.
10. பயிற்சி, திறன் மேம்பாடு, சந்தை இணைப்பு போன்றவற்றின் மூலம் பெண்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குதல், அவர்களுக்கு நிலையான வணிக நிறுவனங்களை ஏற்படுத்த உதவுதல் ஆகியவற்றின் மூலம் அவர்களுக்கானத் தளங்களை வழங்கி மேம்படுத்துதல் .
11. நிலையான விவசாய நடைமுறைகள், சந்தைப்படுத்துதல், வணிகத் திட்டமிடல், வரவு செலவு, நிர்வாகம் ஆகியவற்றோடு தொடர்புடைய திறன்கள் இத்துடன் பொருளாதார நடவடிக்கைகளில் பெண்களுக்குப் பயிற்சி அளித்து, பொருளாதாரத்தின் பொதுவான போக்கில் தொழில்முனைவோரை இரண்டறக் கலக்கச் செய்தல்.
12. விவசாயிகள், வேளாண்மை / சுற்றுச்சூழல் ஆகியவற்றில் செயலாற்றுவோர் பயன்படத்தக்க புதிய தொழில்நுட்பங்கள், மதிப்பு செயலாக்கம் போன்றவற்றைக் கொண்டு விவசாய நிலங்களில் மெய்ப்பிக்கும்/பரிசோதனை செய்யும் சிறப்பு மையங்களை அமைத்தல்.
13. தொடர் செயல்பாட்டின் மூலம் சாத்தியமான தொடக்க நடைமுறைகளைக் கண்டறிந்து பக்குவப்படுத்தி அவற்றைப் பொருத்தமானதாக்கி, இலக்கு மக்களையும் / வேளாண்மையின் இறுதி இலக்கையும் அடையக் கூடியதாக்குதல்.
14. தொழில் முனைவோர்களின் புதிய கண்டுபிடிப்புகள்/ தீர்வுகள்/உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்ய நிதி ஆதாரங்களை உருவாக்குதல், துறை சார்ந்த திறன்களை ஏற்படுத்துதல்,
15. விவசாயம் சார்ந்த தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள் அல்லது வாழ்வாதார உருவாக்கம் ஆகியவற்றில் குறிப்பாக விவசாயம் இத்துடன் விவசாயத்தோடு தொடர்புடைய துறைகளில் புதுமையான சிந்தனையுடன் பாதுகாப்பாகத் தொடங்குதல்.
16. கிராமங்களுக்கு நேரிடையாகச் சென்று விளக்கம் அளித்தல், பயிற்சி அளித்தல், இத்துடன் பிற விழிப்புணர்வு உருவாக்கும் உத்திகள் மூலம் நிலையான விவசாய முறைகளைப் பின்பற்ற முறையான பயிற்சி அளிக்க விவசாயிகளை அடையாளம் காணுதல்.
17. இயற்கை வளங்களை திறம்படவும் செம்மையாகவும் பராமரிக்க/பயன்படுத்த சிறந்த விவசாய நடைமுறைகலைப் பின்பற்றுதல் இத்துடன் 'உகந்த பருவ கால' விவசாய நடைமுறைகளை ஊக்குவித்தல். நுண்ணீர் பாசனம் (தெளிப்பான், சொட்டு நீர் பாசனம்) நீர் சேகரிப்பு முறையை ஊக்குவித்தல், மக்கள் நியாயமான முறையில் நீரைப் பயன்படுத்துதல்.
18. விவசாயத்தில் நல்ல வருமானத்தைப் பெற விவசாயம் சார்ந்த மதிப்பீடுகளைக் கையாளும் திறன்களை மேம்படுத்த வள மேலாண்மை செயலாக்க ஆரம்ப நிலை, சந்தைப்படுத்தல் நடைமுறை போன்றவற்றில் விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தல்.
19. கால்நடை வளர்ப்பு, நாற்றங்கால் பண்ணை போன்ற மாற்றுப் பொருளாதாரச் செயல்பாடுகளை மக்களிடையே ஊக்குவித்தல் இத்துடன் பலவகையான வருமானம் ஈட்டும் வள ஆதாரங்களைப் பயன்படுத்த உதவுதல்.
20. தொழில் முனைவோரின் இலட்சியம், விவசாயத்தின் மீதான ஆர்வம், தீர்வு சார்ந்த அணுகுமுறை ஆகியவற்றோடு புத்தாக்கச் சிந்தனையுடன் இளைஞர்களை உருவாக்குதல்.
21. ஏழை எளிய மக்களின் கல்வி, சமூக, பண்பாட்டு, பொருளாதார மருத்துவ உதவிகளை மேம்படுத்துதல், நிறுவுதல், ஊக்குவித்தல்,
செயற்படுத்துதல், முன்னேற்றுதல் இத்துடன் பொதுப் பயன்பாடு, சமூக நலன் சார்ந்த, அறம்சார்ந்த வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்தல்.
22. வணிகம், கலை, அறிவியல், விளையாட்டு, கல்வி ஆராய்ச்சி, சமூக நலன், சமயம், அறம், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் அல்லது இவை போன்ற பிறவற்றை மேம்படுத்துதல்.